For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவு தள கட்டுமான பணிக்கான ஒப்பந்தம் வெளியீடு!

11:25 AM Jul 02, 2024 IST | Web Editor
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவு தள கட்டுமான பணிக்கான ஒப்பந்தம் வெளியீடு
Advertisement

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவு தள கட்டுமான பணி தொடர்பான ஒப்பந்தம் ISRO தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

விண்வெளி ஆய்விலும், ராக்கெட்டுகளை விண்ணுக்கு செலுத்துவதிலும் அமெரிக்கா, ரஷியாவுக்கு சவால் விடும் வகையில் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் பல புதிய சாதனைகளை படைத்து வருகிறது. உலக அளவில் மிக குறைந்த செலவில் விண்ணுக்கு ராக்கெட்டுகளை அனுப்புவதில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது.

உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் புதிய ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கும் நடவடிக்கையை இஸ்ரோ மேற்கொண்டுள்ளது. தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆந்திராவில் சென்னைக்கு அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்துதான் ராக்கெட்டுகளை விண்ணுக்கு செலுத்தி வருகிறார்கள். அங்கு இரண்டு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. எதிர்காலத்தில் மேலும் 2 ராக்கெட் ஏவுதளங்கள் தேவை என்ற நிலையில் நாடு முழுவதும் பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இந்நிலையில், தமிழ்நாட்டின் தென் பகுதியில் ராக்கெட் ஏவு தளம் அமைக்கப்பட்டும்  என அறிவித்திருந்தனர். தற்போது நாட்டின் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டனர். குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நூறு சதவீதம் நிறைவடைந்து விட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். அதன்படி, குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவு தளத்திற்கான கட்டிட கட்டுமான பணி தொடர்பான ஒப்பந்தம் வெளியீடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : தீபாவளிக்கு சொந்த ஊருக்குச் செல்லும் பொதுமக்கள்: 5 நிமிடங்களுக்குள் விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்!

அதில், ரூ. 20.29 கோடி மதிப்பில் கட்டுமான பணி மேற்கொள்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தொழில்நுட்ப சேவை கட்டிடம், ஏவுதள தீயணைப்பு நிலையம் மற்றும் எஸ்.எஸ்.எல்.வி ஏவுதள மையம் உள்ளிட்டவைகளுக்கான கட்டுமான பணி ஒப்பந்தங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை மாதம் 22ம் தேதி 2.30 மணி முதல் ஒப்பந்தத்திற்கான ஆவணங்கள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யது கொள்ளலாம் எனவும் ISRO தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement