For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உலகின் நம்பர் 1 செஸ் வீரரை தோற்கடித்த குகேஷ்... கோபத்தில் கார்ல்சன் செய்த செயல்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!

உலகின் நம்பர் ஒன் செஸ்வீரர் குகேஸை நார்வே செஸ் தொடரில் கிளாசிக்கல் போட்டியில் தோற்கடித்தார் குகேஷ்.
05:28 PM Jun 02, 2025 IST | Web Editor
உலகின் நம்பர் ஒன் செஸ்வீரர் குகேஸை நார்வே செஸ் தொடரில் கிளாசிக்கல் போட்டியில் தோற்கடித்தார் குகேஷ்.
உலகின் நம்பர் 1 செஸ் வீரரை தோற்கடித்த குகேஷ்    கோபத்தில் கார்ல்சன் செய்த செயல்    இணையத்தில் வைரலாகும் வீடியோ
Advertisement

ஸ்டாவஞ்சரில் இன்று நடந்த செஸ் போட்டியில் ஸ்கோர்போர்டை விட உணர்ச்சிகளே அதிகம் பேசின. உலகின் நம்பர் 1 செஸ் வீரரான கார்ல்சன், நடப்பு உலக சாம்பியனான டி. குகேஷிடம் தோல்வியை தழுவிய பிறகு செஸ்போர்டை குத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

நார்வேயின் ஸ்டாவஞ்சரில் நார்வே செஸ் தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று நடந்த 6வது சுற்று ஆட்டத்தில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை இந்தியாவின் குகேஷ் எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் கார்ல்சனை 3-0 என்ற கணக்கில் குகேஷ் வீழ்த்தினார். இதன்மூலம் கிளாசிக்கல் செஸ் போட்டியில் முதல்முறையாக கார்ல்சனை குகேஷ் தோற்கடித்துள்ளார்.

புள்ளிகள் பட்டியலில் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கார்ல்சன் மற்றும் அமெரிக்காவின் பேபினோ கரானாவை விட ஒரு புள்ளிகள் மட்டுமே பின் தங்கியுள்ளார். கார்ல்சனின் சொந்த மண்ணில், குகேஷ் பெற்றுள்ள வெற்றிக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். போட்டியில் வெற்றிப் பெற்ற குகேஷுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :
Advertisement