"நல்லா சுண்டவிட்டு இறக்குனா சுடச்சுட குடும்பஸ்தன் ரெடி" - வெளியானது #Kudumbasthan படத்தின் டிரெய்லர்!
தமிழ் சினிமாவில் ‘ஜெய் பீம்’ என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் மணிகண்டன். அதனை தொடர்ந்து கதாநாயகனாக லவ்வர், குட் நைட் போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களுக்கு கதை, வசனமும் எழுதியுள்ளார். இவர் தற்போது ‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தினை நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ‘குடும்பஸ்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்திற்கு வைஷாக் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வரும் ஜன.24ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.