Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"46 கோயில்களில் நாளை குடமுழுக்கு நடைபெறுகிறது" - அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

மன்னர் ஆட்சி காலத்தில் நடைபெற்ற கோயில் திருப்பணிகளை விட திராவிட மாடல் ஆட்சியில் அதிகம் நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
11:27 AM Jul 13, 2025 IST | Web Editor
மன்னர் ஆட்சி காலத்தில் நடைபெற்ற கோயில் திருப்பணிகளை விட திராவிட மாடல் ஆட்சியில் அதிகம் நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
Advertisement

ஈரோடு அடுத்த திண்டலில் உள்ள வேலாயுத சுவாமி திருக்கோயிலில் ஆசியாவிலேயே 186அடி உயர முருகர் சிலை 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி மற்றும் சேகர் பாபு ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசியவர்,

Advertisement

"மன்னர் ஆட்சி காலத்தில் நடைபெற்ற திருப்பணிகளை விட திராவிட மாடல் ஆட்சியில் அதிகம் நடைபெற்றுள்ளது. 46 கோவில்களில் நாளை குடமுழுக்கு நடைபெறுகிறது. 1120 கோடி ரூபாய் அரசு மானியத்தில் தமிழ் கடவுளுக்கு 124 கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. திருச்செந்தூர் கோவில் பணிகள் 14 ஆண்டுகளுக்கு பின்னர் HCl நிறுவனத்தின் 200 கோடி உடன் சேர்ந்த பணிகள் முடிந்துள்ளது. 110 படிகள் உள்ள மருதமலை கோயிலில் மின் தூக்கி பணிகள் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

முருகருக்கு பெருமை சேர்த்தவர் தமிழக முதல்வர். புனித மார்கத் தோற்றத்தோடு ஆசியாவிலேயே பெரிய சிலையை திண்டல் கோவிலில் அமைக்க உள்ளோம். இங்கு மிகப்பெரிய சிலை வைத்தால் என்ன? என்று எனக்கு தோன்றியது.

உயரமான சிலை வலுவாக இருக்க வேண்டும், என்ற அடிப்படையில் ஏற்பாடுகள் செய்கிறோம். சிறப்பாக பணிகள் செய்யபடுகிறது. கோவிலுக்கு பல வழிகளை உருவாக்க உள்ளோம். பார்க்கிங் குளறுபடிகள் இல்லாமல் அதற்கான நிலம் விரைவில் கையகப்படுத்தபடும், சிமெண்ட் பயன்படுத்தி, கீழ் புறத்தில் கற்கள் கொண்டு சிலை நிறுவப்படும்.

உலகில் முருகர் கோவில்கள் உள்ளதை கண்டு பிடித்து ஸ்த்பதிகள் ஆய்வில் அறிஞர் அண்ணா கண்டறிந்ததைப் போல இங்கும் ஸ்பதிகள் முறையாக ஆய்வு செய்து சிலை அமைக்கபட உள்ளது.

Tags :
#Ministermuthusamy46 templesDMKErodeMinister SekarBabumurugantempleTamilNaduTemples
Advertisement
Next Article