For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘குபேரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் - லேட்டஸ்ட் அப்டேட்!

09:51 PM Mar 13, 2024 IST | Web Editor
‘குபேரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்   லேட்டஸ்ட் அப்டேட்
Advertisement

தனுஷின் நடிப்பில் குபேரா படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. 

Advertisement

தனுஷின் நடிப்பில் கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகி சுமாரான வெற்றியை பெற்றது. அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷின் இசையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து தன் ஐம்பதாவது திரைப்படமான ராயன் என்ற திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகின்றார் தனுஷ். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

சமீபத்தில் தான் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. மேலும் பா.பாண்டி படத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் ஒரு இயக்குனராக ராயன் படத்தின் மூலம் களமிறங்கி இருக்கின்றார். எனவே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது.

இந்நிலையில் ராயன் படத்தை தொடர்ந்து சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் தனுஷ். வாத்தி என்ற திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கின்றார் தனுஷ். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து ரஷ்மிகா, நாகர்ஜுனா என பலர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் தான் இப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

குபேரா படத்தில் தனுஷின் கெட்டப் வித்யாசமாக இருப்பதால் கண்டிப்பாக இப்படமும் ஒரு வித்யாசமான படமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இப்படத்தின் மூலம் முதல்முறையாக தனுஷுடன் இணைந்து நாகர்ஜுனா நடித்து வருகின்றார். இதைத்தொடர்ந்து இப்படத்தில் நாகர்ஜூனாவின் கதாபாத்திரம் என்ன என்பது பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. விறுவிறுப்பாக படப்பிடிப்பு  நடைபெற்று வரும் நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் குபேரா திரையில் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement