குபேரா இசை வெளியீட்டு விழா... 'வடசென்னை 2' அப்டேட் கொடுத்த நடிகர் தனுஷ்!
‘ராயன்’ திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‘குபேரா’ திரைப்படம் தனுஷின் 51 வது திரைப்படமாக உருவாகிறது. ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதையும் படியுங்கள் : ‘மதயானை கூட்டம்’ பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் காலமானார்… கதை கூறிவிட்டு பஸ் ஏறும் போது நேர்ந்த சோகம்!
சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ, பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. இந்தத் திரைப்படமானது வரும் ஜூன் மாதம் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று (ஜூன்.01) நடைபெற்றது. இதில், நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் நடிகர் தனுஷ் பேசியதாவது,
"நாலு வதந்தி பரப்பி என்னை காலி பண்ணிடலாம்னு நினைத்தால் அதை விட முட்டாள் தனம் எதுவும் இல்லை. ஒரு செங்கலை கூட அசைக்க முடியாது. என் ரசிகர்கள் இருக்காங்க. எண்ணம்போல் வாழ்க்கை. என்னை பத்தி எவ்வளவு வேண்டுமானாலும் வதந்தி பரப்புங்கள். ஒரு படம் ரிலீஸ் ஆகும்போது போது நெகட்டிவிட்டி பரப்புங்கள். எனக்கு என் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருட்டில் தீபந்தம் மாதிரி என்னை அழைச்சிட்டு போவாங்க. அவங்க என் வழி துணை. தம்பிகளா தள்ளி போய் விளையாடுங்க. 2018ல் இருந்து கேட்டுகிட்டே உள்ளீர்கள். அடுத்த ஆண்டு 'வடசென்னை' அடுத்த பாக படப்பிடிப்பு தொடங்கும்"
இவ்வாறு நடிகர் தனுஷ் தெரிவித்தார்.