"நாக சைதன்யா - சமந்தா விவாகரத்துக்கு #KTR தான் காரணம்" - தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா குற்றச்சாட்டு!
நாக சைதன்யா, சமந்தா விவாகரத்துக்கு தெலங்கானா சட்டமன்ற உறுப்பினர் கேடிஆர் தான் காரணம் என அம்மாநில அமைச்சர் கொண்டா சுரேகா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகள் காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். பின்னர், நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், நாக சைதன்யா - சமந்தா விவாகரத்துக்கு தெலங்கானாவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகன் கேடிஆர் தான் காரணம் என தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : MadhyaPradesh | ஆண்டுக்கு வெறும் ரூ.2 வருமானமா? இணையத்தில் வைரலாகும் #IncomeCertificate !
தெலங்கானவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் கொண்டா சுரேகா இது தொடர்பாக பேசியதாவது,
“கே.டி.ஆரின் அராஜகத்தால்தான் பல நடிகைகள் விரைவிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள். சினிமாவை விட்டும் விலகுகிறார்கள். கேடிஆர் பல பார்டிகளை நடத்துகிறார். அதில் நடிகைகளை தவறாக பயன்படுத்தி மிரட்டுகிறார். அவரால்தான் சமந்தாவுக்கு விவாகரத்து நடந்தது. இது அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருந்து ஆந்திர திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருத்துக்கு நடிகர் நாகர்ஜுனா கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார். தனிப்பட்ட குடும்ப விவகாரத்தை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் என நடிகர் நாகர்ஜுனா அறிவுறுத்தினார்.