Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“பாஜக 400க்கு மேற்பட்ட இடங்களில் வென்றால் கிருஷ்ண ஜென்மபூமி கோயில் கட்டப்படும்” - அசாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா பேச்சு!

08:18 AM May 16, 2024 IST | Web Editor
Advertisement

பாஜக 400க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதாகவும், கிருஷ்ண ஜென்மபூமி கோயில் கட்டப்படுவதாகவும் அசாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

Advertisement

ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் நகரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசியதாவது:

நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு 400க்கும் மேற்பட்ட இடங்கள் தேவைப்படுகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றதை தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது. ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

தற்போதைய மக்களவைத் தேர்தலில் பாஜக 400க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும். கிருஷ்ண ஜென்மபூமி கோயில் கட்டப்படும். வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவும் மக்கள் அசாம் போன்று ஜார்க்கண்ட் மாநிலத்திலும் அதிகரித்து வருகின்றனர். இதனால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒரு தரப்பினரை திருப்திபடுத்தும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றன”

இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
assamAssam Chief MinisterBJPElections2024Himanta Biswa SarmaLoksabha Elections 2024News7Tamilnews7TamilUpdatesParliament Elections 2024
Advertisement
Next Article