For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரம்! விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

03:56 PM Nov 05, 2024 IST | Web Editor
கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரம்  விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
Advertisement

கிருஷ்ண ஜென்மபூமி, ஷாஹி இத்கா மசூதி விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணையை, உச்சநீதிமன்றம் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. 

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் இந்து கடவுள் கிருஷ்ணர் பிறந்ததாக கருதப்படும் கிருஷ்ண ஜென்ம பூமியில் கிருஷ்ணர் கோயில், இத்கா மசூதி உள்ளன. கிருஷ்ண ஜென்ம பூமியில் இருந்த கோயிலை இடித்துவிட்டு, முகலாய மன்னன் அவுரங்கசீப் 1670களில் மசூதி கட்டியதாக இந்துக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.

கிருஷ்ண ஜென்மபூமி வளாகத்தில் கிருஷ்ணர் கோயிலும், மசூதியும் அருகருகே அமைந்திருப்பதால், மசூதியை இடித்துவிட்டு அந்த இடத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். அங்கு கிருஷ்ணர் கோயில் கட்ட வேண்டும் என, கிருஷ்ண ஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைப்பெற்று வரும் நிலையில், மதுராவில் உள்ள ஷாஹி ஈத்காவில் ஆய்வு நடத்த வழக்கறிஞர் ஆணையரை நியமித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2023 டிசம்பர் 14ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மசூதி கமிட்டி சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு கடந்த ஜனவரி 16ம் தேதி விசாரித்தது.

இந்த விவகாரத்தில் சிவில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அலகாபாத் உயர்நீதிமன்றம் இது போன்ற உத்தரவை பிறப்பிக்க முடியாது என மசூதி கமிட்டி சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம், மதுராவில் உள்ள ஷாஹி ஈத்காவில் ஆய்வு நடத்த வழக்கறிஞர் ஆணையரை நியமித்த அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க எதிர்தரப்புக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், இ்ந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக முக்கிய விவகாரங்களை சுருக்கமான அறிக்கையாக தாக்கல் செய்ய இரு தரப்பினருக்கும் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

Tags :
Advertisement