வெறிச்சோடி காணப்படும் கோயம்பேடு பேருந்து நிலையம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வரும் நிலையில் கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். குறிப்பாக. சென்னையில் தங்கி இருப்பவர்களும், கல்வி, வேலை காரணமாக வந்தவர்களும் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட பஸ், ரெயில்களில் செல்ல முன்கூட்டியே ஆயத்தமாகி விடுவார்கள்.
இந்தாண்டு பொங்கல் விடுமுறை திங்கள்கிழமை வருகிறது. அதற்கு முன்பு இரு நாட்கள் வார இறுதி விடுமுறை என்பதால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் நேற்று (ஜன.12.) காலை முதலே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கினர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பளவில் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
இதையும் படியுங்கள்: 7 ஆண்டுகளுக்கு முன் மாயமான இந்திய விமானம் | சென்னையிலிருந்து 300 கி.மீ., தூரத்தில் கண்டுபிடிப்பு…!
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் 30-ம் தேதி காலை 11 மணிக்கு திறந்து வைத்தார். சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் 901 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. நேற்று (ஜன.12) இரவு 9 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையம் வந்த பேருந்துகள் 11 மணிக்கு மேல் கூட்டம் இல்லாத காரணத்தால் சுமார் 30 பேருந்துகள் நிறுத்தி வைக்கபட்டன.