Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#KolkattaDoctorMurder: “ரசிகர்கள் என் முடிவை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்” - பின்னணி பாடகி #ShreyaGhoshal!

09:32 AM Sep 01, 2024 IST | Web Editor
Advertisement

“ரசிகர்கள் இந்த முடிவை புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்”

Advertisement

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆக. 8-ம் தேதி பணியில் இருந்த முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய குற்றவாளி சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இந்த குற்றத்தில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு, இதன் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல நாட்களாக மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களை பாதுகாக்கவும், மருத்துவமனைகள் தாக்கப்படுவதை தடுக்கவும் தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

பிரபல பின்னணி பாடகரான ஸ்ரேயா கோஷல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பாடல்களைப் பாடி வருகிறார். இவர் 'ஸ்ரேயா கோஷல் லைவ், ஆல் ஹார்ட்ஸ் டூர்' என்ற தலைப்பில் அமெரிக்காவில் டென்வர், சிகாகோ உள்ளிட்ட பகுதிகளில் இசை நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியிருந்தார். கடந்த ஆக.10-ம் தேதி டெல்லியில் இசைக் கச்சேரியை நடத்தி முடித்திருந்தார். இதைத்தொடர்ந்து, கொல்கத்தாவில் செப். 14-ம் தேதியும், துபாயில் செப். 21-ம் தேதியும் இசைக் கச்சேரி நடைபெறவுள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

"சமீபத்தில் கொல்கத்தாவில் நிகழ்ந்த கொடூரமான சம்பவத்தால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். ஒரு பெண்ணாக அந்த பயிற்சி மருத்துவர் அனுபவித்த கொடூரத்தை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இப்படியான சம்பவம் என்னுள் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. கொல்கத்தாவில் செப். 14-ம் தேதி நடக்கவிருந்த எனது இசை நிகழ்ச்சியை அக்டோபர் மாதத்திற்கு ஆழ்ந்த சோகத்துடன் தள்ளி வைக்கிறேன்.

https://twitter.com/shreyaghoshal/status/1829753602610430300

இந்த நிகழ்ச்சி பலராலும் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நான் அனைவரையும் ஒற்றுமையுடன் இணைக்க வேண்டும். இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து பெண்களின் பாதுகாப்பிற்காகவும், மரியாதைக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். என்னுடைய இந்த முடிவை ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். மனித இனத்தின் மிருகங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம். தயவுசெய்து புதிய தேதியை அறிவிக்கும் வரை பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இசை நிகழ்ச்சிக்காக நீங்கள் எடுத்துள்ள டிக்கெட்டுகள் புதிய தேதி வரை செல்லுபடியாகும். உங்கள் அனைவரையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். ஸ்ரேயா கோஷலின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது இந்த முடிவுக்குப் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
CBIConcertDoctor MurderKolkataNews7TamilShreya GhoshalsingerStop Harassment
Advertisement
Next Article