Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#KolkataDoctorMurderCase - உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு செவி சாய்க்காத பயிற்சி மருத்துவர்கள் | நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு!

12:12 PM Sep 10, 2024 IST | Web Editor
Advertisement

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில், பயிற்சி மருத்துவர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கார் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டமும் வெடித்தது. இந்த வழக்கு தொடர்பாக மருத்துவமனையில் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இதற்கிடையே இந்த கொலையை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்த நிலையில், வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு தொடர்பாக நேற்று சிபிஐயும், மேற்கு வங்காள அரசும் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அறிக்கையை வைத்து விசாரணையை தொடங்கிய நீதிபதிகள் இன்று மாலை 5 மணிக்குள் இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு, பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டனர்.  அவ்வாறு மருத்துவா்கள் பணிக்கு திரும்பவில்லை என்றால் அரசு சாா்பில் துறை சாா்ந்த நடவடிக்கைகள் எடுப்பதை தடுக்க முடியாது எனவும் எச்சாிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என பயிற்சி மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். “எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கவில்லை. நாங்கள் எங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்வோம். சுகாதார செயலாளரும், மருத்துவ கல்வி இயக்குநரும் ராஜிநாமா செய்ய வேண்டும்” என பயிற்சி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தாவில் உள்ள சுகாதாரத்துறை தலைமையகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தவும் பயிற்சி மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Tags :
CBIDoctor Rape and Murder CaseKolkataNews7Tamilnews7TamilUpdatesProtestSupreme courtWest Bengal Government
Advertisement
Next Article