205 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கொல்கத்தா... வெற்றியை உறுதி செய்யுமா டெல்லி?
கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் 48வது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதி வருகின்றன.
போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் கொல்கத்தா பேட்டிங் செய்தது. அதன்படி கொல்கத்தா 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் அடித்தது. குறிப்பாக கடைசி ஓவரில் மட்டும் கொல்கத்தா 3 விக்கெட்டுகளை இழந்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 44 ரன்களும், ரிங்கு சிங் 36 ரன்களும் அடித்தனர்.
டெல்லி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், அக்சர் பட்டேல், நிகம் தலா 2 விக்கெட்டுகளும், சமீரா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதன்மூலம் டெல்லி அணிக்கு வெற்றி இலக்காக 205 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.