For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"கொல்கத்தா அணியில் அதிக விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர்கள் உள்ளனர்" - SRH அணியை எச்சரித்த வாசிம் அக்ரம்!

01:18 PM May 21, 2024 IST | Web Editor
 கொல்கத்தா அணியில் அதிக விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர்கள் உள்ளனர்    srh அணியை எச்சரித்த வாசிம் அக்ரம்
Advertisement

"கொல்கத்தா அணியில் அதிக விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர்கள் உள்ளனர்" என சன் ரைசர்ஸ் ஹைதராபாத்,  அணிக்கு வாசிம் அக்ரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17வது சீசன்,  அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  லீக் சுற்று போட்டிகள் மே – 19-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில்,  இன்று (மே 21-ம் தேதி )முதல் ப்ளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,  ராஜஸ்தான் ராயல்ஸ்,  சன்ரைசர்ஸ் ஹைதராபாத்,  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்து,  பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

லீக் சுற்று முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 வெற்றிகள் பெற்று 20 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து வலுவான அணியாக இருக்கிறது.  சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 வெற்றிகளுடன் 17 புள்ளிகள் பெற்று 2-ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில்,  ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கான முதலாவது பிளே- ஆஃப் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 2-வது இடம் பெற்ற  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

இதையும் படியுங்கள் : ‘இந்தியாவிலேயே கல்வித்துறையில் தலைசிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு’ – அரசு பெருமிதம்!

இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.  இந்த போட்டியில் தோல்வி அடையும் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோதும்.  இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அமைதியாக மற்றும் துணிச்சலாக ஐபிஎல் இறுதி போட்டியில் களமிறங்கும் என அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வாசிம் அக்ரம் கூறியதாவது :

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 1.428 என்ற Net Run Rate உடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் சிறப்பாக செயல்படுகின்றனர்.  இந்த ஐபிஎல் 17வது சிசன் முழுவதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் அதிகளவில் விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்.

குறிப்பாக,  சக்கரவர்த்தி 18 விக்கெட்டுகள்,  ஹர்ஷித் ராணா 16 விக்கெட்டுகள்,  ஆண்ட்ரே ரசல் மற்றும் சுனில் நரைன் தலா 15 விக்கெட்டுகள்,  மிட்செல் ஸ்டார்க் 12 விக்கெட்டுகள் எடுத்து அதிரடியாக விளையாடினர்.  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அமைதியாக மற்றும் துணிச்சலாக ஐபிஎல் இறுதி போட்டியில் களமிறங்கும்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement