கனமழையால் மிதக்கும் கொல்கத்தா - 10 பேர் உயிரிழப்பு!
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெய்த கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனமழையால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் பலர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனமழையால் சாலை, ரயில், விமானப் போக்குவரத்து முடங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளின் தரைதளத்தில் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, துர்கா பூஜை விடுமுறை முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொல்கத்தாவில் 251.4 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும் மோசமான வானிலை காரணமாக கொல் கட்டாவுக்கு வந்து சேர வேண்டிய 40க்கும் மேற்பட்ட விமானங்களும் தாமத மாக தரையிறங்கின. இதனால், விமான பயணியர் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.