For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை கொளத்தூரில் வளர்ச்சித் திட்டப் பணிகள் | முதலமைச்சர் #Stalin நேரில் ஆய்வு!

11:22 AM Sep 24, 2024 IST | Web Editor
சென்னை கொளத்தூரில் வளர்ச்சித் திட்டப் பணிகள்   முதலமைச்சர்  stalin நேரில் ஆய்வு
Advertisement

சென்னை கொளத்தூரில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

சென்னை மாநகரில் சமச்சீா் வளா்ச்சியை உறுதி செய்ய, வடசென்னை வளா்ச்சித் திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று 2023-24-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, 2024 மாா்ச் 14-இல் தங்கச்சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.4,378 கோடியில் 219 திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தாா்.

இந்த நிலையில், சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமம் சாா்பில் 6 புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா வில்லிவாக்கம் சிவசக்தி காலனியில் கடந்த மாதம் நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 6 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

அதன் ஒரு பகுதியாக, கொளத்தூர் தொகுதிக்குள்பட்ட ஜி.கே.எம் காலனியில் புதியதாக கட்டப்பட்டுள்ள அரசு துவக்கப் பள்ளி, மதுரை சாமி மடத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட உடற்பயிற்சிக் கூடம், நேர்மை நகர் மயான பூமியில் புதியதாக கட்டப்பட்டுள்ள 16ஆம் நாள் நீத்தார் நினைவு மண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

மேலும், ஜி.கே.எம் காலனியில் ஜம்புலிங்கம் பிரதான சாலையில் புதியதாக கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தின் கட்டுமானப் பணியினை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேப்பர் மில்ஸ் சாலையில் வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில் புதியதாக அமையவுள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் கட்டப்படவுள்ள இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

https://www.facebook.com/share/v/GiPRK1L3zRtQsP63
Tags :
Advertisement