பெண் குழந்தை பிறந்திருப்பதாக கே.எல்.ராகுல் - அதியா தம்பதி அறிவிப்பு!
இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி கடந்த 2023-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதியா ஷெட்டி, பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளான அதியா ஹீரோ, முபாரகன், நவாப்சதே, மோதிச்சூர் சக்னாச்சூர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கே.எல். ராகுல் - அதியா தம்பதியினர் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் பெண் குழந்தை பிறந்திருப்பதாக போஸ்டரை பகிர்ந்துள்ளனர். தொடர்ந்து அவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கே.எல். ராகுல் அண்மையில் நடந்த சாம்பின்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார். நடைபெற்று வரும் 18 ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள கே.எல். ராகுல், குழந்தை பிறந்ததன் காரணமாக தற்போது நடைபெறும் லக்னோ மற்றும் டெல்லி அணியின் போட்டியில் இடம்பெறவில்லை.