KKRvsRR | போராடிய ராஜஸ்தான் - 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றி!
நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று(மே.04) மாலை அஜிங்க்யா ரஹானே தலைமையிலான டெல்லி அணி, ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் அணியுடன் மோதியது. ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸ் ஆடிய கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரஸ்ஸல் 57* ரன்களும், ரகுவன்ஷி 44 ரன்களும், அஜிங்க்யா ரஹானே 30 ரன்களும், ரஹ்மானுல்லா குர்பாஸ் 35 ரன்களும் அடித்தனர். இதன் மூலம் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 206 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து 207 ரன்களை இலக்காக கொண்டு இரண்டாவது இன்னிங்ஸை ராஜஸ்தான் அணி தொடங்கியது. இதில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருக்கடுத்து வந்த குணால் சிங் ரத்தோர் டக் அவுட்டானார். இதனிடையே தொடக்க வீரராக களம் கண்டு தனது பங்கிற்கு 34 ரன்கள் அடித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார்.
அதன் பின்பு கேப்டன் ரியான் பராக் அதிரடியாக விளையாடி 95 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து வந்த துருவ் ஜூரெல் மற்றும் வனிந்து ஹசரங்கா ஆகியோர் டக் அவுட்டாகினர். இறுதியாக ஷிம்ரான் ஹெட்மியர் மற்றும் சுபம் துபே வெற்றிக்கு போராடினர். இருப்பினும் கொல்கத்தா அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியடைந்தது. இதில் மொயீன் அலி, ஹர்ஷித் ராணா வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.