KKRVsRR | கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு!
18வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று(மார்ச்26) அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. அசாம் மாநிலம் பர்சபரா மைதானத்தில் இப்போட்டி நடக்கவுள்ளது.
இந்த நிலையில் இபோட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதில் கொல்கத்தா அணி சார்பில் அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்) , வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், மொயின் அலி, ரஸ்ஸல், ராமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், வைபவ் அரோரா, ஹர்சித் ராணா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் விளையாட உள்ளனர்.
அதே போல் ராஜஸ்தான் அணியில், ரியான் பராக் (கேப்டன்), யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதீஸ் ராணா, துருவ் ஜூரல்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மியர், ஹசரங்கா, ஜோஃரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா ஆகியோர் விளையாட உள்ளனர்.