#KishkindhaKaandam திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்… எத்தனை கோடி தெரியுமா?
ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியான கிஷ்கிந்தா காண்டம் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 54.5 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
தின்ஜித் அய்யாதன் இயக்கத்தில், மலையாள நடிகர் ஆசிப் அலி நடித்துள்ள திரைப்படம் கிஷ்கிந்தா காண்டம். இத்திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்.12ம் தேதி வெளியான கிஷ்கிந்தா காண்டம் திரைப்படமானது விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றது.
தேர்தலுக்கு முன்னதாக துப்பாக்கி உரிமம் வைத்திருப்பவர்கள் தங்கள் ஆயுதங்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். இதன்படி ஹீரோவின் தந்தை முன்னாள் இராணுவ வீரராக இருப்பதால் அவரும் ஒப்படைப்பதற்காக துப்பாக்கியை தேடுகின்றனர். ஆனால் துப்பாக்கி காணாமல் போகவே இதற்காக புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டு இப்படத்தில் ஆசிஃப் அலியின் மனைவியாக வரும் அபர்ணா பாலமுரளியை விசாரிக்க தொடங்குகின்றனர். இந்த விசாரணையின்போது அடுத்தடுத்த சில மர்மங்கள் வெளிவரத் தொடங்குகிறது. இந்த பாணியில் கதைக்களம் அமைந்துள்ளது.
இத்திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 54.5 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. ரூ. 7 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிஃப் அலி நடித்து இதற்கு முன்பு வெளியான தலவன் (thalavan), அடியோஸ் அமிகோ(adios amigo) ஆகிய படங்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியைத் தேடித் தந்தன. அதேபோன்று, கிஷ்கிந்தா காண்டம் திரைப்படமும் பாக்ஸ் ஆஃபீஸில் வசூலைக் குவித்து வெற்றி வாகை சூடியுள்ளது.