நூறு அரைசதங்கள் விளாசி புதிய சாதனை நிகழ்த்திய ‘கிங்’ கோலி!
நடப்பு ஐபிஎல் 20 தொடரின் லிக் சுற்றில் இன்று(ஏப்ரல்.13) பெங்களூர் - ராஜஸ்தான் அணிகள் மோதின. ஜெய்பூரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. முதலில் களமாடிய ராஜஸ்தான் அணி 175 ரன்களை பெங்களூர் அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய பெங்களூர் அணி 17.3 வது ஓவரில் இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பெங்களூர் அணியின் ஸ்டார் பிளேயர் விராட் கோலி 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களை அடித்து 62 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் அவர் டி20 கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அதன்படி அவர் டி20 போட்டிகளில் 386 இன்னிங்ஸ்களில் விளையாடி தனது 100-வது அரைசதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார். விராட் கோலி டி20 போட்டிகளில் 100 அரைசதங்கள் விளாசி உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதன் விவரம், டேவிட் வார்னர் - 108 விராட் கோலி -100* பாபர் அசாம் - 90 கிறிஸ் கெயில் -88 ஜோஸ் பட்லர் - 86.