For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில் #WhatsApp மூலம் நுழைவுச் சீட்டு பெறும் வசதி அறிமுகம்!

02:52 PM Jan 11, 2025 IST | Web Editor
கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில்  whatsapp மூலம் நுழைவுச் சீட்டு பெறும் வசதி அறிமுகம்
Advertisement

சென்னை கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில், வாட்ஸ் அப் மூலம் நுழைவுச் சீட்டு பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

சென்னையின் முக்கிய சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலங்களில் ஒன்று கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா. இங்கு ஆண்டுதோறும் 7 முதல் 8 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். மேலும், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகளைச் சேர்ந்த 60,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பூங்காவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில், சென்னை கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில், வாட்ஸ் அப் வழியே நுழைவுச் சீட்டு பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : முதலமைச்சர் #MKStalin-ஐ சந்தித்து வாழ்த்து பெற்ற திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்!

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில், பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது எதிர்பார்க்கப்படும் கூட்டத்தை நிர்வகிக்கவும், பார்வையாளர்களுக்கு அதிக வசதியை அளிக்கவும் வாட்ஸ்அப் (Whatsapp) டிக்கெட் வழங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 8667609954 என்ற எண்ணுக்கு ஹாய் "Hi" செய்தியை அனுப்புவதன் மூலம், பார்வையாளர்கள் தேவையான விவரங்களைப் பதிவேற்றலாம் மற்றும் தங்களின் மொபைல் போன்களில் நேரடியாக தங்கள் நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கலாம்.

இந்த முயற்சியானது தொந்தரவு இல்லாத அனுபவத்தை உறுதி செய்கிறது. டிக்கெட் கவுன்டர்களில் காத்திருக்கும் நேரத்தை குறைக்கிறது மற்றும் பார்வையாளர்களின் திருப்திக்காக டிஜிட்டல் தீர்வுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement