For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தனுஷுக்கு ஜோடியாகும் கியாரா அத்வானி? - வெளியான புதிய தகவல்!

07:56 PM Jun 02, 2024 IST | Web Editor
தனுஷுக்கு ஜோடியாகும் கியாரா அத்வானி    வெளியான புதிய தகவல்
Advertisement

ஆனந்த் எல் ராய் இயக்கும் ‘தேரே இஷ்க் மேன்’  படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குநர் என ஒரு ஆல்-ரவுண்டராக இருந்து வருகின்றார். தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் குபேரா படத்தில் நடித்து வருகின்றார். அதே சமயம் ‘ராயன்’ மற்றும்  ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ஆகிய இரண்டு படங்களையும் இயக்கி வருகின்றார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவாகும் ‘ராயன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. தனுஷுடன் இப்படத்தில் இணைந்து சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்து வருகின்றனர். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் வெளிவர காத்திருக்கும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹைப் இருந்து வருகின்றது.

இந்தி திரையுலகை பொறுத்தவரை  'ராஞ்சனா', 'ஷமிதாப்', 'அத்ராங்கி ரே' ஆகிய படங்களில் தனுஷ் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் 'தேரே இஷ்க் மேன்' என்ற படத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement