For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் - கூடை பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி...!

07:56 PM Jan 21, 2024 IST | Web Editor
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்   கூடை பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி
Advertisement

கேலோ விளையாட்டு போட்டியில், கூடை பந்து போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றுள்ளது.

Advertisement

மத்திய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018-ம்
ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில்
நடத்தப்பட்ட இந்த போட்டியானது, இந்தாண்டு தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. கேலோ இந்தியா போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 5,500க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், கோவையில் உள்ள பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லுாரி உள்விளையாட்டு அரங்கில் கடந்த 20-ம் தேதி முதல் ஜன. 25-ம் தேதி வரை தேசிய அளவிலான கேலோ இந்தியா கூடைப்பந்து மற்றும் வரும் 28-ம் தேதி முதல், 30 வரை தாங்-டா போட்டிகளும் நடைபெற உள்ளன.

அதனைத்தொடர்ந்து, கோவை பிஎஸ்ஜி மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கேலோ விளையாட்டு இந்தியா போட்டியில், ஆடவர் அணி கூடைப்பந்து போட்டியில் கர்நாடகா அணியை எதிர்கொண்ட தமிழ்நாடு அணி 99 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இந்நிலையில், கர்நாடகா அணி 72 புள்ளிகள் பெற்றது. 27 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதையும் படியுங்கள் : கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்!

இதையடுத்து, மற்றொரு போட்டியில் தமிழ்நாடு மகளிர் அணி மற்றும் சண்டிகர் மகளிர் அணி இடையே மோதல் நடைபெற்றது. இந்த போட்டியின் முதலில் இருந்தே அபாரமாக விளையாடிய தமிழ்நாடு மகளிர் அணி 109 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. சண்டிகர் அணி 45 புள்ளிகள் பெற்றது. மேலும், 64 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ்நாடு மகளிர் கூடைப்பந்து அணி மாபெரும் வெற்றி பெற்றது.

Tags :
Advertisement