'கான் சர்வதேச திரைப்பட விழா' - கேரள நடிகையின் தர்பூசணி குறியீடும், பாலஸ்தீன ஆதரவும்!
கான் சர்வதேச திரைப்பட விழாவில் கேரள நடிகை கனி குஸ்ருதி கையில் வைத்திருந்த தர்பூசணி வடிவிலான கைப்பை பலரின் கவனத்தை பெற்றுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் 1946ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 'கான் சர்வதேச திரைப்பட விழா' நடைபெற்று வருகிறது. இந்த திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் 7 திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மலையாளத்தில் இருந்து தேர்வான "All We Imagine As Light " என்ற திரைப்படம் இன்று திரையிடபட்டது.
இந்த ஆண்டு 'கான் சர்வதேச திரைப்பட விழா' மே 14ம் தேதி தொடங்கி மே 25ம் தேதி வரை நடைபெற்றது. பல்வேறு திரைப்படங்கள் இந்த விழாவில் பல கெளரவ விருதுகளுக்கு போட்டியிட்டன. இந்திய திரைத்துறை சார்பாக முன்னணி பாலிவுட் நடிகர் நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உள்ளனர்.
இந்த திரைப்படத்தில் நடித்திருந்த கனி குஸ்ருதி தன்னுடைய கையில் தர்பூசணி வடிவத்தில் கைப்பை வைத்திருந்தார். இது தற்போது பார்வையாளர்கள் பலரின் கவனத்தை ஈர்த்தது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி உள்ளது.
இதையும் படியுங்கள் : ராஜ்கோட் பயங்கர தீ விபத்து : “இது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு” – குஜராத் உயர்நீதிமன்றம்!
தர்பூசணி பாலஸ்தீன மக்களின் போராட்டத்தின் அடையாளமாகவும், அவர்களின் ஒற்றுமையின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. வெட்டப்பட்ட தர்பூசணியின் நிறம் (சிகப்பு, பச்சை, கருப்பு, வெள்ளை) அப்படியே, பாலஸ்தீன கொடியின் நிறத்தை பிரதிபலிக்கிறது. காசா மீது இஸ்ரேல் போர் நடத்தி வரும் நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் தர்பூசணி வடிவிலான பையை கொண்டு வந்து நடிகை கனி குஸ்ருதி பாலஸ்தீனம் மீதான தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.