Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'லயனஸ்' திரைப்படத்தின் மூலம் சர்வதேச இசையமைப்பாளராக அறிமுகமாகும் கதீஜா ரஹ்மான்!

04:43 PM Nov 22, 2023 IST | Web Editor
Advertisement

பிரிட்டன்- இந்தியா நாடுகள் இணைந்து தயாரிக்கும் 'லயனஸ்' படத்தின் மூலம் கதீஜா ரஹ்மான் சர்வதேச அளவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

Advertisement

இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும், பிரிட்டனின் பிரிட்டிஷ் திரைப்பட கழகமும் இணைந்து தயாரிக்கும் இந்த படம் இரு பெண்கள் பற்றிய கதையை மையப்படுத்தி உருவாகவுள்ளது.

சீக்கிய பேரரசின் கடைசி அரசரான மஹாராஜா துலீப் சிங்கின் மகள் சோபியா துலீப் சிங் வாழ்வையொட்டிய கதை ஒரு பகுதியாகவும் 1990-களில் வாழும் படித்த புலம்பெயர்ந்த பெண்ணின் புனைவு கதை மற்றொரு பகுதியாகவும் படத்தில் இடம்பெறவுள்ளது.

இதையும் படியுங்கள்:“பூட்டு, சாவி, சுத்தியல்” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன குட்டி ஸ்டோரி!

20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சோபியா, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் பெண்களுக்கும் வாக்குரிமை வேண்டும் எனக் குரல் கொடுத்தவர்களில் ஒருவர். பிரிட்டிஷ் நடிகை பைஜ் சந்து மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி ஆகியோர் இந்த கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

பெண் இயக்குநர் கஜ்ரி பாபர் இப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் போஸ்டர் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து கதீஜா ரஹ்மான் பேசும்போது,

லயனஸ் படத்தில் வேலை செய்வதை கௌரவமாகவும், அதே நேரம் சுவாரசியமாகவும் உணர்கிறேன். இந்த படத்தின் கதையை  கேட்டது முதலே இதனோடு பிணைக்கப்பட்டுவிட்டேன்.

இளவரசி சோபியாவின் போராட்டத்துக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் நீண்ட காலத்திற்குப் பிறகு கிடைக்க இருப்பதே எங்களின் விருப்பம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், 2020-ல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து தயாரித்த ஃபரிஷ்தா என்கிற பாடலை கதீஜா பாடினார். அதன் பிறகு இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், பாடகர் அறிவு ஆகியோரோடு இணைந்து பணியாற்றிய கதீஜா,  தமிழில் இயக்குநர் ஹலீதா ஷமீம் இயக்கும் மின்மினி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

Tags :
ARRahmanFilmgoa international film festivalinternationalKhadija RahmanLionessmusiccomposer
Advertisement
Next Article