For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சைவ உணவுகள் மட்டும் தயாரித்தால் அயோத்தியில் 'கேஎஃப்சி'க்கு அனுமதி!

05:41 PM Feb 07, 2024 IST | Web Editor
சைவ உணவுகள் மட்டும் தயாரித்தால் அயோத்தியில்  கேஎஃப்சி க்கு அனுமதி
Advertisement

சைவ உணவுகளை மட்டுமே வழங்கினால் கேஎஃப்சி கடைக்கு கூட அயோத்தியில் அனுமதி வழங்க தயார் என்று அயோத்தியில் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல்  பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில்,  கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை ஜன.22-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது.  பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார்.

தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனம் செய்து வருவதால் இந்தியாவின் முக்கியமான ஆன்மீக தலமாக அயோத்தி உருவெடுத்துள்ளது. இதை தொடர்ந்து கோயிலை சுற்றி உள்ள பகுதிகளில் பிரபலமான உணவுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. கோயிலுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள இந்த உணவகங்களில் சுவையான சைவ உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.  

இதுமட்டுமின்றி, ராமர் கோயிலில் இருந்து 1 கி.மீ தொலைவில் டோமினோஸ் பீட்சா உணவகமும் திறக்கப்பட்டுள்ளது. இந்த பீட்சா கடை திறக்கப்பட்ட சில நாட்களிலேயே வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனினும் அயோத்தியை சுற்றி 15 கி.மீ தொலைவு வரை அசைவ உணவு, மதுபானத்திற்கு தடை என்றாலும், புதிதாக திறக்கப்பட்ட இந்த பீட்சா கடைகளில் சைவ வகை பீட்சாக்கள் மட்டுமே விற்கப்படுகின்றன.

அயோத்தியில் உள்ள அரசு அதிகாரியான விஷால் சிங் இதுகுறித்து பேசிய போது, "அயோத்தி-லக்னோ நெடுஞ்சாலையில் KFC தனது கடையை அமைத்துள்ளது. ஏனெனில் நாங்கள் அசைவ உணவுகளை இங்கு அனுமதிக்கவில்லை. சைவ உணவுகளை மட்டுமே விற்க முடிவு செய்தால், கேஎப்சி நிறுவனத்துக்குக் கூட இடம் வழங்கத் தயாராக உள்ளோம்'' என்றார்.

உத்திரபிரதேச மாநில தொழில் துறையின் மூத்த அதிகாரி அபிஷேக் சிங் பேசிய போது “ கோயில் திறக்கப்பட்ட பிறகு அயோத்தி சுற்றுலா எழுச்சி பெற்றுள்ளது. பிஸ்லேரி மற்றும் ஹல்டிராம் அயோத்தி போன்ற நிறுவனங்கள், அயோத்தி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கள் பிரிவுகளை அமைக்க முன்மொழிந்துள்ளனர். இவை தவிர, பார்லே போன்ற பல நிறுவனங்கள் உணவுச் சங்கிலி விற்பனை நிலையங்கள், குறிப்பாக பேக்கேஜ் செய்யப்பட்ட தண்ணீர், பிஸ்கட் ஆகியவற்ற விநியோகம் செய்து வருகின்றன” என்று தெரிவித்தார்.

Tags :
Advertisement