For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#KeralaStateAward கேரள மாநில சினிமா விருதுகள் - முழு பட்டியல் இதோ!

03:44 PM Aug 16, 2024 IST | Web Editor
 keralastateaward கேரள மாநில சினிமா விருதுகள்   முழு பட்டியல் இதோ
Advertisement

கேரள மாநில சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த படங்கள் மற்றும் நடிகர் , நடிகைகள் விருதுகளை பெற்றுள்ளனர் என்பதை விரிவாக காணலாம்.

Advertisement

70வது தேசிய சினிமா  விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இதேபோல ஒவ்வொரு மாநில அரசும் தங்களது மாநில மொழி படங்களுக்கு விருதுகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் கேரள அரசு மலையாள சினிமாத் துறையினருக்கு வழங்கப்படும் மாநில விருதுகளை இன்று அறிவித்தது.

அதன்படி  54-வது கேரள மாநில திரைப்பட விருதுக்கு 160 திரைப்படங்கள் பல்வேறு பிரிவுக்குக் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. இதில், 84 படங்கள் புதுமுக இயக்குநர்களால் உருவானவை. இந்த விருதுகளை திருவனந்தபுரத்தில் கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் அறிவித்தார்.

கேரள மாநில விருதுகள் 
  • சிறந்த நடிகர் - பிருத்விராஜ் (ஆடுஜீவிதம்)
  • சிறந்த நடிகை -ஊர்வசி (உள்ளொழுக்கு)
  • சிறந்த படம் - காதல் தி கோர்
  • சிறந்த இயக்குநர் - பிளெஸ்ஸி (ஆடுஜீவிதம்)
  • சிறந்த இரண்டாவது படம்: இரட்ட
  • சிறந்த துணை நடிகர் விஜய்ராகவன் (பூக்காலம்)
  • சிறந்த அறிமுக இயக்குநர் பஜில் ரஜாக் (தடவு)
  • சிறந்த பின்னணி இசை -  மேத்திவ் புலிக்கன் (காதல் தி கோர்)
  • சிறந்த இசை (பாடல்) - ஜஸ்டின் வர்கீஸ் (செந்தாமர சாவர்)
  • சிறந்தபாடல் - ஹரீஷ் மோகன் (செந்தாமர சாவர்)
  • சிறந்த ஒளிப்பதிவு சுனில் கே.எஸ்.
  • சிறந்த கதை - ஆதர்ஷ் சுகுமாரன் (காதல் தி கோர்)
  • சிறந்த சப்தம் -ஜெயதேவன் சக்காத், அனில் ராதாகிருஷ்ணன் (உள்ளொழுக்கு)
  • சிறந்த நடனம் - ஜிஷ்னு ( சுலைகா மன்ஜில் ) 
  • சிறந்த ஒலி வடிவமைப்பு : ரஸூல் பூக்குட்டி , சரத் மோகன் (ஆடுஜீவிதம்)
நடுவர் குழுவின் சிறப்பு விருது:
  • நடிப்பு - கிருஷ்ணன் (ஜைவம்), கே.ஆர்.கோகுல் (ஆடுஜீவிதம்), சுதி கோழிக்கோடு(காதல் தி கோர்),
  • படம்- கங்காச்சாரி.
  • சிறந்த பெண் / திருநங்கை பிரிவு - ஷாலினி உஷா தேவி (என்னென்னும்)
  • சிறந்த விஷுவல் -2018
Tags :
Advertisement