For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: நாளை தொடங்குகிறது தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான யுத்தம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் நாளை மோதுகின்றன.
05:44 PM Jun 10, 2025 IST | Web Editor
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் நாளை மோதுகின்றன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி  நாளை தொடங்குகிறது தென்னாப்பிரிக்கா   ஆஸ்திரேலியா இடையேயான யுத்தம்
Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் நாளை மோதுகின்றன. இப்போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நாளை தொடங்கி ஜூன் 15 வரை நடைபெறகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடுவது இதுவே முதல்முறை ஆகும்.

Advertisement

தென்னாப்பிரிக்கா அணி கடந்த சில மாதங்களாக டெஸ்ட் ஆட்டங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மேலும் பேட் கம்மின்ஸ் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ஒருமுறை கூட இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி தோல்வியை கண்டதே இல்லை. அதே சமயம் தெம்ப பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி இதுவரை ஆடிய 9 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றியும், 1 போட்டி டிராவிலும் முடிந்துள்ளது.

இதனால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் ரசிகர்கள் பலரும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் பெற்று வரலாறு படைக்கும் என கூறி வருகின்றனர்.

Tags :
Advertisement