பாலியல் வழக்கில் ராப்பர் வேடனை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் தடை!
கேரளாவின் பிரபல ராப் என்கிற ஹிரந்தாஸ் முரளி பாடகர் வேற்றுமைகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான சுயாதீன பாடல்களை பாடக்கூடியவர். இதனால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் வேடன் திரைப்படங்களிலும் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த மாதம் பெண் மருத்துவர் ஒருவர் வேடன் தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி வேடன் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் மருத்துவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி வேடன் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது.
அப்போது புகார்தாரர் தரப்பு வேடன் மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், இது தொடர்பாக அவர் சமூக ஊடகங்களில்மன்னிப்பு கேட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
புகார்தாரரின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், புகார்தாரர்களின் வாதங்கள் ஊடக செய்திகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும் ஊடக செய்திகளை மட்டும் குற்றத்தை நம்ப முடியாது என்றும் தெளிவுபடுத்தியது. மேலும் "சம்மதத்துடன் கூடிய உறவு எப்படி பாலியல் வன்கொடுமையாக மாறும்?" என்று நீதிமன்றம் கேள்விஎழுப்பிய நீதிமன்றம், உறவில் விரிசல் ஏற்படும்போது, அதை பாலியல் வன்கொடுமையாகக் கருத முடியாது என்றும் கருத்து தெரிவித்தது. மேலும் முன் ஜாமீன் மீதான வழக்கு நாளை பரிசீலிக்கப்படும் வரை வேடனை கைது செய்ய இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.