Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“வல்லக்கடவு சாலையை 4 வாரத்தில் செப்பனிட வேண்டும்” - முல்லைப் பெரியாறு அணை வழக்கில் கேரளாவுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வல்லக்கடவு சாலையை சுற்றுசூழல் பாதிக்காதவாறு, உரிய பொருட்களை கொண்டு கேரளா அரசே 4 வாரத்தில் செப்பனிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10:28 AM May 20, 2025 IST | Web Editor
வல்லக்கடவு சாலையை சுற்றுசூழல் பாதிக்காதவாறு, உரிய பொருட்களை கொண்டு கேரளா அரசே 4 வாரத்தில் செப்பனிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement

முல்லைப் பெரியாறு அணை வழக்கு நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

Advertisement

நீதிபதிகள் :-

பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக எடுக்கப்பட வேண்டிய விசயங்களில் ஏதேனும் முன்னேற்றம் உள்ளதா?.

கேரளா அரசு:-

வழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்துள்ளோம். மேலும் அணை பராமரிப்பு விவகாரத்தில் வல்லக்கடவு சாலையை செப்பனிட வேண்டும், ஆனால் தமிழ்நாடு உரிய முறையில் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தவறி வருகிறது.

குறிப்பாக அந்த சாலையை செப்பனிட சில மரங்களை வெட்ட வேண்டும், ஆனால் தமிழ்நாடு அரசு அதிக அளவிலான மரங்களை வெட்ட வேண்டும் என கூறுகிறது.

தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் சேகர் நாப்டே :-

மரங்களை வெட்ட கேரளா முன்பு அனுமதி அளித்தது. தற்போது மத்திய அரசின் சுற்று சூழல் அனுமதி கோர வேண்டும் என்று கேரளா கூறுகிறது. அதற்கான விண்ணப்பம் மத்திய அரசுக்கும், கேரளா அரசுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு வழக்கறிஞர்:-

தமிழ்நாடு அரசு மனுவை பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். அனுமதி வழங்குவது தொடர்பாக விரைந்து முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

நீதிபதிகள்:-

அணை பராமரிப்புக்கு மரங்களை வெட்ட அனுமதி வழங்குவதற்கு கேரளாவுக்கும், மத்திய அரசுக்கும் கால நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்படும். மராமத்து பணிகள் நடத்த ஏதுவாக வள்ளக்கடவு சாலையை கேரளா அரசே ஏன் சீரமைக்க கூடாது?. மராமத்து பணிகளை மேற்கொள்ள பணியாளர்கள் செல்ல ஏதுவாக இரண்டாவது படகு ஒன்றை தமிழ்நாடு அரசுக்கு கேரளா அனுமதிக்க வேண்டும்.

தமிழக அரசு :-

வல்லக்கடவு சாலையை கேரளா அரசு செப்பனிட்டால் அதற்கான செலவை ஏற்கிறோம்.

கேரள அரசு :-

சாலையை செப்பனிடுவது என்றால் அதனை எங்களது பொறியாளர்களின் அறிவுறுத்தலின்படி செப்பனிடுவோம்.

தமிழக அரசு :-

அணையில் grouting பணியை மேற்கொள்ள மேற்பார்வை குழு உத்தரவிட்டும் அதனை அமல்படுத்த கேரளா அரசு எங்களை அனுமதிப்பதில்லை.

நீதிபதிகள் உத்தரவு:-

முல்லைப் பெரியாறு அணையை பராமரிப்பதற்கு ஏதுவாக, மரங்களை வெட்டுவது தொடர்பாக மத்திய அரசின் சுற்றுசூழல் அனுமதியை 4 வாரத்தில் வழங்க வேண்டும்.

வல்லக்கடவு சாலையை சுற்றுசூழல் பாதிக்காதவாறு, உரிய பொருட்களை கொண்டு கேரளா அரசே 4 வாரத்தில் செப்பனிட வேண்டும். அந்த பணி நடக்கும்போது தமிழ்நாடு தரப்பு அதிகாரி உடனிருக்க வேண்டும். என உத்தரவிட்டனர்.

Tags :
KeralaMullaperiyar damSupreme courttamil nadu
Advertisement
Next Article