For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கேரளா | பலசரக்குக் கடையில் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து!

02:38 PM Dec 19, 2024 IST | Web Editor
கேரளா   பலசரக்குக் கடையில் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து
Advertisement

கேரள மாநிலம் இடுக்கி அருகே பலசரக்குக் கடையில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement

கேரள மாநிலம் இடுக்கி அருகே தங்கமணி பகுதியைச் சேர்ந்தவர் ஜோய். இவர் பலசரக்குக்கடை நடத்தி வருகிறார். இவரது பலசரக்குக்கடையில் சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஐந்துக்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டன. அருகில் உள்ள மக்கள் சிலிண்டர்களை எடுத்து செல்ல வசதியாக இருக்கும் என பலசரக்கடை வைத்துள்ளார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில் 12 க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பாதுகாப்பாக வைக்க பட்டிருந்த நிலையில் அங்கு தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ஜோய் என்பவரின் பலசரக்குக் கடை எரிந்து நாசமகியுள்ளது. மேலும் தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் தீயை விரைந்து அணைத்துள்ளனர். தீயை உடனே அனைக்க தொடங்கியதால் அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags :
Advertisement