கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார்
மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார்.
10:09 AM Jul 16, 2025 IST
|
Web Editor
Advertisement
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடந்த 5 ஆம் தேதி உயர் சிகிச்சைக்காக அமரிக்கா சென்றிருந்தார். அமெரிக்காவில் உள்ள மினசோட்டாவில் மாயோ மருத்துவமனையில் அவருக்கு உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.10 நாட்கள் நடந்த சிகிச்சைக்கு பின் பினராயி விஜயன் தனது மனைவி கமலா விஜயனுடன் கேரளா திரும்பினார்.
Advertisement
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அவரை கேரளா தலைமைச் செயலாளர், மாநில காவல்துறைத் தலைவர் ஆகியோர் வரவேற்றனர். மருத்துவ நோக்கங்களுக்காக பினராயி விஜயன் மேற்கொண்ட நான்காவது அமெரிக்க பயணம் இதுவாகும்.
இதனைதொடர்ந்து, இன்று முதல் தனது பணிகளை மீண்டும் தொடங்குவார் என்றும், வியாழக்கிழமை நடைபெறும் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Next Article