For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு... கேரளாவில் சோகம்!

04:57 PM Dec 29, 2024 IST | Web Editor
ஆற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு    கேரளாவில் சோகம்
Advertisement

கேரளாவில் இரு வேறு ஆறுகளில் மூழ்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் அருகே குண்டூச்சி எரிஞ்சிபுழா பகுதியைச் சேர்ந்தவர்கள் அஷ்ரப் - ஷபானா தம்பதி. தற்போது பள்ளிகள் விடுமுறை என்பதால் அதனை கொண்டாடும் விதமாக அஷ்ரப் - ஷபானாவின் வீட்டுக்கு அவர்களது உறவினர்களான மஜீத்-சபீனா தம்பதி மற்றும் மஞ்சேஸ் வரத்தை சேர்ந்த சித்திக்-ரம்லா தம்பதி தங்களது குழந்தைகளுடன் வந்திருந்தனர்.

இந்த நிலையில், இவர்கள் அனைவரும் அங்குள்ள எரிஞ்சிபுழா ஆற்றிற்கு நேற்று குளிக்க சென்றனர். அவர்கள் அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அஷ்ரப்பின் மகன் யாசின் (12), அவர்களது வீட்டுக்கு வந்திருந்த மஜீத்தின் மகன் சமத் (12), சித்திக்கின் மகன் ரியாஸ் (17) ஆகிய மூவரும் ஆற்றில் மூழ்கினர். உடனடியாக சிறுவர்களின் குடும்பத்தினர் சிறுவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியாததால் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் துரதிஷ்டவசமாக ஆற்றில் மூழ்கிய சிறுவர்கள் மூவரும் உயிரிழந்தனர். உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை மீட்ட போலீசார் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் கண்ணூரில் ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்தனர். கோட்டாலி பகுதியை சேர்ந்த வின்சென்ட் (42) என்பவரும் அவரது பக்கத்து வீட்டு சிறுவன் அல்பினும் (9) சரல்புழா ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது சிறுவன் அல்பின் ஆற்றுக்குள் தவறி விழுந்தான். சிறுவனை காப்பாற்ற வின்சென்ட் ஆற்றுக்குள் குதித்தார். அப்போது இருவரும் ஆற்றில் மூழ்கி இறந்தனர். காசர்கோடு மற்றும் கண்ணூரில் ஆற்றில் மூழ்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
Advertisement