For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரிட்டன் பிரதமராகிறார் கீர் ஸ்டார்மர் - 15ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது தொழிலாளர் கட்சி!

10:37 AM Jul 05, 2024 IST | Web Editor
பிரிட்டன் பிரதமராகிறார் கீர் ஸ்டார்மர்   15ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது தொழிலாளர் கட்சி
Advertisement

பிரிட்டனில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில் பெரும்பான்மை இடங்களை பிடித்து கீர் ஸ்டார்மர் பிரதமராகிறார். இதன் மூலம் 15ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்தது.

Advertisement

பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருகிறார். இவரது பதவி காலம் 2025 ஜனவரியில் நிறைவடைகிறது. இதனால் நேற்று பிரிட்டனில் ஒரேகட்டமாக அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியும், தொழிலாளர் கட்சியும் நேருக்கு நேர் மோதின.

நேற்று காலை தொடங்கிய தேர்தல் இரவு 7 மணிக்கு சுமூகமாக முடிந்தது. இந்தியா போலல்லாமல் பிரிட்டனில் வாக்குச்சீட்டு முறையே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என தெரிவித்திருந்தது.  கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெறும் எனவும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 650 தொகுதிகளில் 410தொகுதிகளில் வெற்றிப் பெற்று தனிப்பெரும்பான்மையோடு தொழிலாளர் கட்சி ஆட்சியமைக்கும் எனவும் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன.

கன்சர்வேட்டிவ் கட்சி 131 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் அம்முடிவுகள் தெரிவித்தன. இந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற்ய் வந்தது. இதன்படி ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி வெறும் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 326 இடங்கள் தேவை என்ற நிலையில் 400 க்கும் அதிகமான இடங்களை தொழிலாளர் கட்சி கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கீர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி 380க்கும் க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம்  15 ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளர் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

Tags :
Advertisement