கீர்த்தி சுரேஷின் ’ரிவால்வர் ரீட்டா’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு...!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், சூர்யா, மகேஷ் பாபு போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான நடிகையர் திலகம் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சென்ற ஆண்டு வெளியான பேபி ஜான் படத்தின் மூலம் இந்தியிலும் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் ‘ரிவால்வர் ரீட்டா’ என்னும் படத்தில் நடித்துள்ளார். சந்துரு இயக்கியுள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார், அஜய் கோஷ், ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ், தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் 'ரீவால்வர் ரீட்டா' திரைப்படம் நவம்பர் 28 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.