Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இபிஎஸ்-க்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு - விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

02:10 PM Jan 19, 2024 IST | Web Editor
Advertisement

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

அதிமுகவின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமிக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றம் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தன்னை பற்றி தெரிவித்த கருத்துக்கள் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கே.சி.பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள் : பாரதிய விண்வெளி ஆய்வு நிலையத்தின் சோதனை அடுத்த ஆண்டில் தொடங்கும் – இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத்!

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கே.சி.பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் விசாரணையின் போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே, கே.சி.பழனிச்சாமியை கட்சியிலிருந்து நீக்கியதாக தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இந்த  வழக்கை விசாரித்த நீதிபதி, அதிமுகவில் இருந்து கே.சி.பழனிச்சாமியை நீக்கி பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்த உத்தரவை ரத்து செய்தது.

மேலும் கே.சி.பழனிச்சாமியின் அவதூறு வழக்கை தொடர்ந்து விசாரிக்க சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்திற்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனைதொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைகோரி எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,  இ.பி.எஸ்.சுக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கை கீழமை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக கே.சி.பழனிசாமி பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தும் உத்தரவிட்டது.

Tags :
defamation caseEPSinterimKC PalanishamiOrdersSupreme court
Advertisement
Next Article