கவின் கொலை வழக்கு - சுர்ஜித் உள்ளிட்ட மூவருக்கும் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் கவின்குமார் (24). இவர் சென்னையில் மென்பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில் தனது காதலியை பார்ப்பதற்காக கடந்த 27.07.2025ம் தேதி பாளையங்கோட்டைக்கு வந்துள்ளார். இதையறிந்த அவரின் சகோதரரான சுர்ஜித் கவினை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கவின் உயிரிழந்தார்.. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து சுர்ஜித் மற்றும் சுர்ஜித்தின் தந்தை சரவணன் ஆகியோர் போலீசாரால் கைது செய்யபட்டனர். மேலும் தமிழ் நாடு அரசு கடந்த மாதம் 30ம் தேதி இந்த வழக்கினை சிபிசிஐடியிக்கு மாற்றியது. தொடர்ந்து
கவினைக் கொலை செய்யப் பயன்படுத்திய ரத்தக்கறை படிந்த சட்டையை மறைத்து வைக்கவும், தப்பித்து வந்த பைக்கின் பதிவு எண்ணை மாற்றவும் உதவிய அவரது நண்பர் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக மூவருக்கும் நீதிமன்றம் ஆகஸ்ட் 26-ம் தேதி நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவதை தொடர்ந்து மூவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிபதி ஹேமா முன்பு ஆஜர் படுத்தப்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, மூவரின் நீதிமன்றக் காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார்.