காவல்கிணறு தினசரி சந்தையில் புடலங்காய் ரூ.3 விற்பனை - விவசாயிகள் கவலை!
காவல்கிணறு தினசரி சந்தையில் வரத்து அதிகரிப்பால் புடலங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.3 விற்பனையானதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு விலக்கில் தினசரி காய்கறி சந்தை உள்ளது. இந்த பகுதியில் ராதாபுரம், திசையன் விளை மற்றும் நாங்குநேரி தாலுகாவில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்தும் விளைவிக்கப்படும் கத்தரி, மிளகாய், பூசனி, வெள்ளரி, புடலை, வெண்டை உட்பட பல்வேறு வகை காய்கறிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
இதையடுத்து, இன்று பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு விலக்கில் தினசரி காய்கறி சந்தை நடைபெற்றது. அதில், புடலங்காய், கத்தரி, மிளகாய், பூசனி, வெள்ளரி, புடலை, வெண்டை உட்பட பல்வேறு வகை காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்கள் : கல்லிடைக்குறிச்சி மலை பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைகள் – விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்!
அதன்படி, கடந்த சில நாட்களாக கிலோ ஒன்றுக்கு ரூ. 30 மேல் விற்பனையாகி வந்த புடலங்காய் தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ. 3 விற்பனையானது. வரத்து அதிகரிப்பால் இந்த விலை குறைவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். புடலங்காய் விலை வீழ்ச்சியால் உற்பத்தி செய்த விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்தனர்.