#KrishnaJayanthi-யை முன்னிட்டு விமரிசையாக நடைபெற்ற கரூர் பண்டரிநாதன் கோயில் உறியடி திருவிழா... ஏராளமோனோர் பங்கேற்பு!
கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கரூர் பண்டரிநாதன் கோயிலில் 102 ஆம் ஆண்டு
உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் திருவிழா வெகு விமரிசியாக நடைபெற்றது.
நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு பக்தர்கள் கோயில்கள் மற்றும் வீடுகளில் கிருஷ்ணரை வழிபட்டனர். இதன்காரணமாக கோயில்களில் மக்கள் கூட்டம் களைகட்டியது. இவ்விழாவை முன்னிட்டு கரூர் பண்டரிநாதன் கோயிலில் 102 -ம் ஆண்டு உறியடி மற்றும் வழக்கு மரம் ஏறும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பின்னர், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், பண்டரிநாதர் திருவீதி உலா வாணவேடிக்கையுடன் கோலாகலமாக நடைபெற்றது. மேலும், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்த குழந்தைகளுக்கு திருக்குறள் பேரவை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.