கரூர் துயரம் - வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்பித்த சிறப்பு புலனாய்வு குழு..!
கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விசரிக்க ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது. இந்த உத்தரவிற்கு எதிராக தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை விதித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றியது. மேலும் சிறப்பு புலனாய்வு குழுவிற்க்கு தடைவிதித்து வழக்கு தொடர்பாக சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை ஒப்படைக்கவும் உத்தரவிட்டது.
அதன் படி இன்று சிறப்பு புலனாய்வு குழுவால் இதுவரை விசாரிக்கப்பட்டவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை கரூர் குற்றவியல் நீதிமன்றம் சமர்பிக்கப்பட்டது. ஆவணங்களை கையெழுத்திட்டு நீதிபதி பெற்றுக்கொண்டார்.