#Karur ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் ஆவணி மாத பிரதோஷ விழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற ஆவணி மாத பிரதோஷ விழா நந்தி பகவானுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
கரூர் மாவடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி ,அரிசி மாவு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : உணவு போட்டியில் இட்லி தொண்டையில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு – #Onam கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்!
இதனைத்தொடர்ந்து நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வெள்ளி கவசம் சாத்தப்பட்டு பக்தர்கள் வழங்கிய பல்வேறு வண்ண பூக்களால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர், ஆலயத்தின் சிவாச்சாரியார் நந்தி பகவானுக்கு தீபாராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இந்த ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.