"மரணத்தின் படையெடுப்பால் கரூர் கருப்பூர் ஆகிவிட்டது" - வைரமுத்து!
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் நேற்று இரவு தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டம் நடைபெற்றது. விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தாங்க முடியவில்லை;
இரவு என்னால்
தூங்க முடியவில்லை
மரணத்தின் படையெடுப்பால்
கரூர் கருப்பூர் ஆகிவிட்டது
அந்த மரணங்களுக்கு
முன்னும் பின்னுமான
மனிதத் துயரங்கள்
கற்பனையில் வந்து வந்து
கலங்க வைக்கின்றன
பாமரத் தமிழர்களுக்கு
இப்படி ஒரு பயங்கரமா?
இந்த வகையில்
இதுவே கடைசித் துயரமாக
இருக்கட்டும்
ஒவ்வோர் உயிருக்கும்
என் அஞ்சலி
ஒவ்வொரு குடும்பத்துக்கும்
ஆழ்ந்த இரங்கல்
இனி இப்படி நிகழாமல்
பார்த்துக் கொள்வதே
இந்த நீண்ட துயரத்துக்கு
நிரந்தர நிவாரணம்
ஆடும் உடம்பு
அடங்குவதற்கு நாளாகும்". இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.