கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்.
10:04 AM Jul 19, 2025 IST | Web Editor
Advertisement
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார். கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும், நடிகருமான மு.க.முத்து (77) உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
Advertisement
இவர் அணையா விளக்கு, பூக்காரி, பிள்ளையோ பிள்ளை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் நடித்த அவர் பின்னர், பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை. அரசியல் பணிகளிலும் விருப்பம் இல்லாமல் ஒதுங்கி கொண்டார்.
இந்த நிலையில் மு.க.முத்துவின் உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.