"நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கியவர் கருணாநிதி" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தந்தையர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தந்தை கருணாநிதியை நினைவுகூர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
08:29 AM Jun 15, 2025 IST | Web Editor
Advertisement 
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு உலக தந்தையர் தினம் இன்று (ஜூன் 15) கொண்டாடப்படுகிறது.
Advertisement 
இந்த நாள் ஒவ்வொருவரின் வாழ்விலும் அவர்களது தந்தையின் பங்களிப்புகள், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை கவுரவிக்கும் நாளாக கருதப்படுகிறது. இந்த நிலையில் தந்தையர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தலைவராக வழிகாட்டிய தந்தை! தந்தையாக நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய தலைவர்!#FathersDay2025 #FatherOfModernTamilNadu pic.twitter.com/MbfhcaEe4G
— M.K.Stalin (@mkstalin) June 15, 2025
அந்த பதிவில், "தலைவராக வழிகாட்டிய தந்தை! தந்தையாக நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய தலைவர்!" இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.