கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தவர் கருணாநிதி - நயினார் நாகேந்திரன் பேச்சு
ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜக சார்பில் அரண்மனை பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்,
“கச்சத்தீவை தாரைவார்த்து விட்டு ஒன்றுமே தெரியாதது போல் நடித்தவர் கலைஞர் கருணாநிதி. மகளிர் உரிமை தொகை தேர்தல் நேரத்தில் மட்டுமே வழங்கப்பட்டது. குவைத்தில் இருந்த மீனவரை மீட்டு அவரது குடும்பத்திற்கு 3.75 லட்சம் இழப்பீடு பெற்று கொண்டது பாஜக அரசு.
தமிழகத்தில் கஞ்சா போதை அதிகரிப்பால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. ஆனால் முதலமைச்சர் இதற்கு பொறுப்பேற்க மாட்டார். கரூர் தவெக விஜய் கூட்டத்தில் பாட்டிலுக்கு 10 ரூபாய் என விஜய் பேசியதுடன் எப்படி கூட்ட நெரிசல் ஏற்பட்டது. யாரால் நடந்தது என்பது எல்லாருக்கும் தெரியும். அங்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடு இல்லை என்பது தான் உண்மை. ஆனால் முதலமைச்சர் அதனை ஏற்க மறுக்கிறார்.
கள்ளசாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் கொடுக்கும் திமுக அரசு, விவசாயிகள் உயிரிழந்தால் வெறும் 3 லட்சம் வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் மக்களை ஏமாற்றிய திமுக கட்சியை வரும் தேர்தலில் புறகணித்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.