கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் #MKStalin!
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்தார். அதற்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா, பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி மத்திய அரசு சார்பில் அவரின் உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை இன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார். அதன் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 18) மாலை 6.50 மணியளவில் நடைபெறவுள்ளது.
விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து உரை நிகழ்த்தவுள்ளார். நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகிக்கவுள்ளார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். விழாவில், தமிழக அமைச்சர்கள், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார். இதையடுத்து, பிரதமரின் வாழ்த்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நன்றிகளை தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் :#CinemaPosters ஒட்டுவதற்கு குறிப்பிட்ட இடம் ஒதுக்க வேண்டும் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் ஆனந்தராஜ் கோரிக்கை!
கலைஞரின் கனவுகளை நனவாக நாம் தொடர்ந்து ஒன்றிணைவோம். கலைஞர் ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதைக்கு முன்னேறியது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார்.
இந்நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் இன்று வெளியிடப்பட உள்ள நிலையில், அதற்கு வாழ்த்து தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.