Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாளை ஓடிடியில் வெளியாகிறது ‘கருடன்’!  

02:08 PM Jul 02, 2024 IST | Web Editor
Advertisement

‘கருடன்’  திரைப்படம் அமேசான் பிரைம் உள்ளிட்ட 3 ஓடிடி தளங்களில் நாளை  (ஜூலை 3) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த மாதம் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தில் சூரியின் நடிப்பு பாராட்டப்பட்டது. இத்திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ.50 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், திரையரங்கில் அமோக வரவேற்பை பெற்ற கருடன் திரைப்படம் தற்போது ஓடிடிக்கு வருகிறது. இப்படம் நாளை (ஜூலை 3) ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அமேசான் பிரைம், சிம்ப்ளி சவுத், டெண்ட் கொட்டா ஆகிய மூன்று ஓடிடி தளங்களில் கருடன் திரைப்படம் வெளியாக உள்ளது.

Tags :
GarudanOTT Release DateRS Durai SenthilkumarsasikumarSooriUnni MukundanvetrimaaranYuvan shankar raja
Advertisement
Next Article