வள்ளியூர் முருகன் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற கார்த்திகை தெப்பத் திருவிழா!
நெல்லை மாவட்டம் வள்ளியூர் முருகன் கோயிலில் கார்த்திகை தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
குகை கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம் நெல்லை மாவட்டத்தில்
அமைந்துள்ள வள்ளியூர் முருகன் கோயில். இக்கோவிலில் நடக்கும் முக்கிய
திருவிழாக்களில் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்
தெப்பத் திருவிழாவும் ஒன்றாகும்.
இதையும் படியுங்கள்: சபரிமலைக்கு இணையாக குற்றாலத்தில் குவியும் ஐயப்ப பக்தர்கள்…
மேலும் ஆண்டுதோறும் நடைபெறும் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதன் பின்பு இரவு 11 மணிக்கு முருகப்பெருமான் வள்ளியுடன் தெப்பத்தில் எழுந்தருளி 11 வளையம் சுற்றி வந்தார். இவ்விழாவில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் வள்ளியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நள்ளிரவில் உற்சவர் கோயிலுக்குள் எழுந்தருளி பின்பு தொடர்ந்து முருகபெருமாள் வள்ளியுடன் வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.