சீர்காழி | சட்டை நாதர் கோயில் பௌர்ணமி கிரிவலம் கோலாகலம்!
சீர்காழியில் சட்டை நாதர் கோயிலில் கார்த்திகை மாத பௌர்ணமி கிரிவலம் கோலகலமாக நடைப்பெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டை நாதர்சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தைமுன்னிட்டு பௌர்ணமி கிரிவலம் கோலகலமாக நடைபெற்றது. முன்னதாக கிழக்கு ராஜகோபுரம் பிரம்மபுரீஸ்வரர் சுவாமி சந்நிதியில் வழிபாடு மேற்கொண்ட பக்தர்கள் தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாகச் சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தனர்.
இதையும் படியுங்கள் : “கூட்டணி வரும் போகும்… ஆனால் அதிமுகவின் கொள்கை நிலையானது” – #EPS பேச்சு
கிரிவலத்தின் போது ஆபத்து காத்த விநாயகர், கணநாதர்,சொர்ணாகர்ஷனபைரவர், சித்திவிநாயகர், கோமளவல்லி அம்மன் ஆகிய கோயில்களில் கிரிவல பக்தர்கள் சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர். பக்தர்கள் சிவாய நம ஓம் என பஞ்சாட்சரம் மந்திரம் உச்சரித்தவாறே சென்றனர். முன்னதாக ராஜகோபுரம் வழியாகச் சுவாமி அம்பாள் வீதிஉலா நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.